×

இளங்கோவன் பிறந்தநாள் விழா தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி

ஈரோடு, டிச.24: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ். இளங்கோவன் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்ற வெங்கடாசலம், மண்டல தலைவர்கள் ஜாபர்சாதிக், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர்கள் கண்ணப்பன், சிவாஜிகணேசன், முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் முகமதுஅர்சத், நிர்வாகிகள் ஆறுமுகம், நடராஜ், பெரியசாமி, சின்னசாமி, அங்காளபரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Illangovan ,Birthday Celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...